LATEST NEWS
BREAKING: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை… பெரும் பரபரப்பு..!!
கரூரில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை 7 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் கட்சி மாறுவதற்காக ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் நிபந்தனை ஜாமின் வழங்கியிருந்தது. இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில்தான், கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செந்தில் பாலாஜியின் வீடு மட்டுமன்றி, அவரது உதவியாளர் சுப்பிரமணியின் மூர்த்திபாளையம் வீடு, கரூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பாஸ்கரின் கோயம்பள்ளி வீடு மற்றும் கார்த்திக் என்பவரது அடுக்குமாடி குடியிருப்பு என பல்வேறு இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இச்சோதனையின் போது வீட்டில் இருந்த செந்தில் பாலாஜியின் பெற்றோரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
