LATEST NEWS
BREAKING: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்க மனு நிராகரிப்பு – விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு..!!
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யக் கோரிய இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நிராகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் ஒப்புதலின்றி, வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முக்கிய முடிவுகளைத் தலைமைத் தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக எடுத்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற தேர்தல் ஆணையர்கள் மற்றும் மத்திய சட்ட அமைச்சகம் ஆகியோர் விளக்கமளிக்கக் கோரி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் போன்ற பலதரப்பு அமைப்புகள் ஒருமனதாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இதுகுறித்த விரிவான விசாரணைக்குப் பின்னரே உரிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.
