LATEST NEWS
“குழந்தை தூங்குறான்…” கொன்றுவிட்டு நாடகமாடிய தாய்.. கணவர் கேட்ட ஒற்றை போன் காலால் அம்பலம்.. நடுங்க வைக்கும் பகீர் பின்னணி..!!
உத்தரப் பிரதேசத்தின் மதுரா பகுதியில், ருச்சி என்ற பெண் தனது 3 வயது மகன் மாதவ் என்பவனைக் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த அன்று அப்பெண் தனது கள்ளக்காதலனுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, குழந்தை அருகில் சத்தம் போட்டு இடையூறு செய்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த தாய், இரக்கமின்றிச் சிறுவனின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். பின்னர், குழந்தை தூங்குவதாகக் குடும்பத்தினரிடம் பொய் கூறி நம்ப வைத்ததால், இயற்கை மரணம் என நினைத்து அவர்கள் இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்துள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் தனது மனைவி கள்ளக்காதலனுடன் தொலைபேசியில் பேசும்போது, குழந்தையைக் கொன்ற விவகாரம் குறித்துப் பேசியதை கணவர் தற்செயலாகக் கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, தான் செய்த கொடூர குற்றத்தை அப்பெண் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
