LATEST NEWS
“வியூஸ்களுக்காக இப்படியொரு கூத்தா..?!” ஒரே நேரத்துல 3 பெண்களுடன் தாலி கட்டிய வாலிபர்… பின்னணியில் இருக்கும் அதிரடி ட்விஸ்ட்.. உறைந்துபோன நெட்டிசன்கள்..!!
உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் ஒரே நேரத்தில் மூன்று பெண்கள் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதாகச் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க குழந்தைகள் நலக் குழு உத்தரவிட்டதை அடுத்து, திங்களன்று அக்குழுவின் முன் ஆஜரான அப்பெண்கள், சமூக ஊடகங்களில் பிரபலமாவதற்காகவும், ‘லைக்களுக்காகவும்’ மட்டுமே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு போலியான சம்பவம் என்று ஒப்புக்கொண்டனர். அத்துடன், இணையவழித் துன்புறுத்தல்களைச் சந்தித்த பிறகே இது உண்மை எனப் பொய்யாகக் கூறியதாகவும், தங்களின் செயலுக்கு வருத்தமும் மன்னிப்பும் தெரிவிப்பதாக எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
https://www.instagram.com/reel/DbLrOQCj52A/?utm_source=ig_web_button_share_sheet
தோரியா கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளான தேவிகா, சவி மற்றும் அவர்களது உறவினர் அல்கா ஆகியோர் ஹசன்பூரில் உள்ள கோயிலில் விகாஸ் என்பவரைத் திருமணம் செய்வது போன்ற வீடியோ ஜூலை 17 அன்று வெளியானது. இவர்கள் நால்வரும் சமூக வலைதளங்களில் அதிக பின்தொடர்பாளர்களைக் கொண்ட உள்ளடக்க உருவாக்குநர்கள் ஆவர். கடந்த ஆறு மாதங்களாகவே விகாஸ் இவர்களது பதிவுகளில் கணவராக நடித்து வந்துள்ளார். இந்த வீடியோ சனாதன மரபுகளையும் மத நம்பிக்கைகளையும் அவமதிப்பதாகக் கூறி இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையும் விசாரணையைத் தொடங்கியது.
மூன்று பெண்களில் ஒருவர் சிறுமியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குழந்தைகள் நலக் குழு இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தது. CWC தலைவர் அதுலேஷ் குமார் பரத்வாஜ் கூறுகையில், அப்பெண்களின் வயது குறித்த ஆவணங்கள் தீவிரமாகச் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், விசாரணை முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடந்தபோது பூசாரி இல்லாத சமயத்தில் இந்த வீடியோ படமாக்கப்பட்டதாகக் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
