LATEST NEWS
தனுஷ் வந்தால்… திமுக, அதிமுக காலி..! ராதன் பண்டிட் கணிப்பு..!!
ஜோதிடர் ராதன் பண்டிட் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், நடிகர் தனுஷ் ஒருவேளை அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் இல்லாது போகும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக, 2031-ஆம் ஆண்டுத் தேர்தலில் முதல்வர் விஜய்யை வீழ்த்துவதற்காக திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்கக் கூடும் என்று தான் கணித்திருந்ததாக அவர் நினைவுகூர்ந்தார்.
இருப்பினும், தனுஷின் அரசியல் வருகை அமைந்தால் சூழல் முற்றிலும் மாறும் என்றும், அவர் நேரடியாக 2-வது இடத்தைப் பிடிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தமிழக அரசியல் களம் ஒரு கட்டத்தில் பிரதான போட்டியாக ‘முதல்வர் விஜய் vs தனுஷ்’ என்ற நிலைக்கு மாறக்கூடும் என்றும் அவர் தன் கணிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
