“எனக்கு பீரியட்ஸ்” முதலிரவில் சாக்குப்போக்கு சொன்ன மனைவி.. காலையில் கழிப்பறையில் கண்ட அந்த காட்சி… புதுப்பெண்ணின் ரகசியத்தைக் கண்டுபிடித்த அண்ணி… கதறியபடி காவல்நிலையம் ஓடிய கணவன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எனக்கு பீரியட்ஸ்” முதலிரவில் சாக்குப்போக்கு சொன்ன மனைவி.. காலையில் கழிப்பறையில் கண்ட அந்த காட்சி… புதுப்பெண்ணின் ரகசியத்தைக் கண்டுபிடித்த அண்ணி… கதறியபடி காவல்நிலையம் ஓடிய கணவன்..!!

Published

on

ஷாஜாபூரில் காய்கறி வண்டி வைத்துப் பிழைப்பு நடத்தி வரும் ஏழை வாலிபர் ஒருவருக்கு, அண்டை வீட்டார்களின் மூலமாக ராஜ்கர் பச்சோர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினருடன் வரன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. மணமகள் வீட்டார் அவசரப்படுத்தியதால், கடந்த ஜூன் 29-ஆம் தேதி பச்சோரில் உள்ள ஒரு கோவிலில் வைத்துத் திருமணம் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் திருமணத்திற்காகப் பெண் வீட்டார், சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் என வரனிடமிருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வைத்துள்ளனர். திருமணம் முடிந்த அடுத்த நாளே மணமகள் தனது புகுந்த வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால், முதலிரவு நாளன்று தனக்கு மாதவிடாய் காலம் என்று கூறித் தப்பித்த அவர், ஜூலை 2-ஆம் தேதியே வயிற்று வலி எனக் காரணம் கூறித் தனது தாய் வீட்டிற்குத் தற்காலிகமாகத் திரும்பியுள்ளார்.

கிட்டத்தட்ட 21 நாட்கள் தனது தாய் வீட்டில் தங்கியிருந்த புதுப்பெண், கடந்த ஜூலை 23 அன்று மீண்டும் கணவர் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். ஆனால், அவரது நடவடிக்கைகளிலும் உடல் மொழியிலும் ஏதோ மாற்றம் இருப்பதாகக் கணவரின் அண்ணிக்கு (ஜேத்தனி) சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவர் அந்தப் பெண்ணை ரகசியமாகக் கண்காணித்து வந்துள்ளார். ஒருநாள், அந்தப் புதுப்பெண் தனது முகத்தில் ஷேவிங் கிரீம் தடவிக்கொண்டு, ஆண்களைப் போல முகச்சவரம் (ரேசரால் தாடி எடுத்தல்) செய்வதைக் கண்டு அண்ணி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, தான் தினமும் முகச்சவரம் செய்வது வழக்கம் தான் என்று மிகவும் சாதாரணமாகப் பதிலளித்துள்ளார்.

Advertisement

புதுப்பெண்ணின் பதிலால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அடுத்த நாள் அவரிடம் மிகக் கடுமையாக விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அவர் பெண் அல்ல, ஒரு திருநங்கை (கின்னார்) என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தங்களை ஒரு திட்டமிட்ட திருமண மோசடி கும்பல் ஏமாற்றி, ஐந்து லட்சம் ரூபாயைப் பறித்துக் கொண்டு ஏமாற்றியதை உணர்ந்த மணமகனின் குடும்பத்தினர் உடனடியாக கோட்வாலி காவல் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தனர். இப்புகாரின் அடிப்படையில், மணமகளின் தந்தை லக்ஷ்மி நாராயண், ஆசாத், ராகேஷ், ராஜா மற்றும் சந்திரோபாய் ஆகிய ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, இதன் பின்னணியில் ஏதேனும் பெரிய மோசடி கும்பல் செயல்படுகிறதா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in