கால்வாயில் மிதந்த பெண் சடலம்… விபத்தா..? கொலையா..? கிரேட்டர் நொய்டாவில் நடந்தது என்ன..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கால்வாயில் மிதந்த பெண் சடலம்… விபத்தா..? கொலையா..? கிரேட்டர் நொய்டாவில் நடந்தது என்ன..?!

Published

on

கிரேட்டர் நொய்டாவின் தன்கவுர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டா கிராமம் அருகே உள்ள கால்வாயில், 26 வயதான ரீனா என்ற பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் காவல்துறை செக்போஸ்ட் அருகே கால்வாயில் பெண்ணின் உடல் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டனர். மேலும், அப்பகுதியில் ஆய்வு செய்தபோது, சற்று தொலைவில் நீரில் மூழ்கிய நிலையில் இருந்த ஒரு தார் காரையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.

இச்சம்பவம் குறித்து உயிரிழந்த பெண்ணின் கணவர் மோஹித் கூறுகையில், தானும் தன் மனைவியும் மதுராவிலிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது காரின் கட்டுப்பாடு இழந்து கால்வாயில் விழுந்ததாகவும், அதில் தான் தப்பித்துவிட்ட நிலையில் தன் மனைவி நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், இதனை விபத்து என ஏற்க மறுக்கும் ரீனாவின் சகோதரர் சோனு, தன் தங்கையைக் கணவரே திட்டமிட்டு கொலை செய்துவிட்டு நாடகமாடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 20 நாட்களாகத் தன் கணவர் விவாகரத்து கோரி தனக்கு அழுத்தம் கொடுத்து வந்ததாக ரீனா போனில் கூறி வந்ததாகவும், 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

தன்கவுர் காவல் நிலைய அதிகாரி மனோஜ் குமார் தெரிவிக்கையில், பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவரும் என்றும் கூறினார். தற்போது காவல்துறையினர் இச்சம்பவத்தை சாலை விபத்து மற்றும் திட்டமிட்ட கொலை என இரு கோணங்களிலும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in