பூட்டிய அறைக்குள் புதுமணத் தம்பதி மர்ம மரணம்…! 5 மாதத்தில் முடிந்த காதல் வாழ்க்கை… கான்பூரை உலுக்கிய சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பூட்டிய அறைக்குள் புதுமணத் தம்பதி மர்ம மரணம்…! 5 மாதத்தில் முடிந்த காதல் வாழ்க்கை… கான்பூரை உலுக்கிய சோகம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் பர்ரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், செவ்வாய்க்கிழமை மாலையில் வாடகை அறையொன்றில் புதுமணத் தம்பதியினர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர் சௌரப் சவிதா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையிலும், மனைவி ராணி தரையில் சடலமாகவும் மீட்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், கணவர் மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனப் காவல்துறை சந்தேகிக்கிறது.

உயிரிழந்த சௌரப் சவிதா, சசேண்டி பகுதிக்குட்பட்ட கைந்தா கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் ராணியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு டெல்லியில் வசித்து வந்த இவர்கள், சில நாட்களுக்கு முன்புதான் கான்பூர் திரும்பி பர்ரா-7 பகுதியில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கியிருந்தனர். செவ்வாய்க்கிழமை மதியம் நீண்ட நேரமாக அறைக்கதவு திறக்கப்படாத நிலையில், ஜன்னல் வழியே துப்பட்டா தொங்குவதைக் கண்ட அண்டை வீட்டு பெண் வீட்டின் உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் கதவைத் தட்டியும் பதிலில்லாததால் காவல் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

Advertisement

சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் கதவைத் திறந்து இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகக் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் தடயவியல் சோதனைகளின் முடிவுக்குப் பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் மற்றும் பின்னணி தெளிவடையும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in