CRIME
அதிர்ச்சி!. ஆத்திரத்தில் மனைவியின் வயிற்றில் 6 முறை கத்தியால் குத்திய கணவன்.. நடந்தது என்ன?.. ஆக்ராவை உலுக்கிய கொடூர சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் தாஜ்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கணவன் ஒருவன் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரன்வீர் என்ற நபர் தனது மனைவி குந்தியை கத்தியால் வயிற்றுப் பகுதியில் ஆறு முறை கொடூரமாகக் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர், கொலையாளி ரன்வீரை தப்பியோட விடாமல் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையின்படி, இந்தத் தம்பதியினருக்கு இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் அந்தப் பெண் கடந்த எட்டு மாதங்களாகத் தனது தாய் வீட்டிற்குச் சென்று வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், தம்பதியினரைச் சேர்த்து வைப்பதற்காக இரு குடும்பத்தினருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை பஞ்சாயத்து கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அப்போது கணவன் ரன்வீர் தனது மனைவியைக் கட்டாயப்படுத்தித் தன்னுடன் அழைக்க முயன்றபோது, கோபமடைந்த குந்தி அங்கிருந்த அனைவரின் முன்னிலையிலும் கணவனின் முகத்தில் அறைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்தக் கொடூரக் கொலையைச் செய்துள்ளார்.
