CINEMA
“மறுவார்த்தை பேசாதே” நடிகை மேகா ஆகாஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது…. யாரோடு தெரியுமா…? வைரல் போட்டோஸ்…!!
தமிழ் சினிமாவில் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். தனுஷிற்கு ஜோடியாக மறுவார்த்தை பேசாதே என்ற பாடலின் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தற்போது தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். பெரும்பாலும் ஹீரோயின்கள் அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள் அல்லது சக நடிகர்களை திருமணம் செய்து கொள்வது வழக்கம். சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கட்சி ராகவ் சாதாவுக்கும் பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த வரிசையில் பிரபல அரசியல்வாதியின் மகனை நடிகை மேகா ஆகாஷ் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது சாய் விஷ்ணு என்பவரோடு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த புகைப்படங்களை பகிர்ந்த நடிகை மேகா தன்னுடைய ஆசை நிறைவேறியதாக நெகழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார் .
View this post on Instagram