CINEMA
உங்க பயோபிக்கில் நடிக்க யாரை தேர்வு செய்வீங்க..? ராகுல் டிராவிட் சொன்ன பதில்…. ஒரே கலகல தான்…!!
மும்பையில் நடைபெற்ற தனியார் விருது நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கலந்து கொண்டார். பயிற்சியாளராக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி சென்று 20 ஓவர் உலகக் கோப்பை வென்று தந்ததற்காக விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ராகுல் டிராவிட் தலைமையில் கீழ் ஏறத்தாழ 11 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி ஐசிசி கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த விருது விழாவில் செய்தியாளர்களுடைய கேள்விக்கு ராகுல் டிராவிட் உற்சாகமாக பதில் அளித்தார். அப்பொழுது, CEAT கிரிக்கெட் விருது விழாவில் ராகுல் டிராவிட்டிடம் உங்களுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க நீங்கள் யாரை தேர்வு செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் பணம் அதிகமாக கொடுத்தால் நானே நடிப்பேன் என்று பதில் அளித்துள்ளார். இதனால் அங்கு சிரிப்பலை ஏற்பட்டுள்ளது.