CINEMA
தலைவரே இது நீங்களா…? ஜி.பி முத்துவின் திருமண போட்டோஸ்…. கமெண்டுகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்…!!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான ஜி.பி முத்துவின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிறது. டிக் டாக் மூலமாக பிரபலமானவர்களில் ஒருவர்தான் ஜி.பி முத்து. இவர் உடன்குடியை சேர்ந்த மரப்பொருள் விற்பனையாளர். இவர் youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதனை தொடர்ந்து வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த பொழுது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொள்வதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார் .இன்று ஜிபி முத்து என்றால் யார் என்று தெரியும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார். தற்போது கடை திறப்பு விழா, பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்று வரும் ஜிபி முத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் .
இந்த நிலையில் வாழ்க்கையில் தனித்துவமான சாதனை ஒன்றை நடத்தி சமீபத்தில் 12 லட்சம் முதல் 15 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கினார். தற்போது படங்களிலும் பிசியாக நடித்து வரும்இவருடைய திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்க்கும் பொழுது எப்படி இருக்கிறாரோ அப்படியே இன்றும் இருந்து வருகிறார் என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
View this post on Instagram