ஹீமோ குரேஷியுடன் கைகோர்த்து….. ரொமான்டிக் லுக்கில் ஷிகர் தவான்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஹீமோ குரேஷியுடன் கைகோர்த்து….. ரொமான்டிக் லுக்கில் ஷிகர் தவான்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!

Published

on

இந்திய கிரிக்கெட் வீரரான ஷிகார் தவான் முதன் முதலில் நடிக்க உள்ள திரைப்படத்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்திய கிரிக்கெட் வீரரான ஷிகார் தவான் பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். இந்த திரைப்படத்தில் நடிகைகள் ஹீமா குரேசி, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் பெயர் டபுள் எக்ஸ்எல்.

இந்த திரைப்படத்தில் அவர்கள் மட்டுமல்லாமல் நடிகர் மகத்,  இந்தி நடிகர் ஜாஹீர் இக்பால் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றன.ர் இந்நிலையில் நடிகை ஹீமா குரேஷியுடன் கிரிக்கெட் வீரர் ஷிகார் தவான் கைகோர்த்து நிற்கும் ரொமான்டிக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இரண்டு பெண்களின் வாழ்க்கை பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் மீரட்டை சேர்ந்த விளையாட்டு தொகுப்பாளியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார்.

Advertisement

புதுடில்லியை சேர்ந்த பேஷன் டிசைனராக சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் நவம்பர் 4-ம் தேதி நெட்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் நடித்தது தொடர்பாக ஷிகர் தவான் தெரிவித்திருந்ததாவது “தேசத்துக்காக விளையாடும் ஒரு விளையாட்டு வீரராக என் வாழ்க்கை எப்போதும் மிகவும் பரபரப்பாக இருக்கும். நல்ல பொழுதுபோக்கு படங்களை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

இந்த கதை கேட்டதும் என்னுள் ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இது முழு சமூகத்திற்கும் ஒரு அழகான செய்தியாகும். இந்த படத்தை பார்த்து பல இளம் பெண்கள் சிறுவர்கள் தங்களது கனவுகளை நோக்கி பயணிக்க தொடங்குவார்கள் என்று நம்புகிறேன்” என அவர் தெரிவித்திருந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in