CINEMA
“என்னது..கழுத்தில் தாலி செயினா?!” ராதிகாவுடன் எடுத்த போட்டோவில் த்ரிஷா செய்த மர்ம வேலை.. எமோஜிக்கு பின்னால் இருக்கும் ரகசியம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை த்ரிஷாவின் கழுத்தில் தாலி செயின் போன்ற ஒரு நகை இருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அவருக்கு ரகசியத் திருமணம் ஆகிவிட்டதா என்ற பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. நடிகை ராதிகா சரத்குமாருடன் த்ரிஷா நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று அண்மையில் இணையத்தில் பகிரப்பட்டது. அந்தப் புகைப்படத்தில் தனது கழுத்தில் இருந்த செயினைத் த்ரிஷா திட்டமிட்டே ஒரு ‘ஹார்ட்டின்’ எமோஜியை வைத்து மறைத்துப் பதிவிட்டிருந்தார். இதனை கூர்ந்து கவனித்த நெட்டிசன்கள், அவர் ஏதோ ஒரு ரகசியத்தை மறைக்க முயல்கிறார் என்று கூறி அந்தப் புகைப்படத்தை மிக வேகமாக வைரலாக்கத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து, த்ரிஷா கழுத்தில் அணிந்திருந்த அந்தச் செயின், கேரளக் கிறிஸ்தவ மணப்பெண்கள் தங்களது திருமணத்தின் போது பாரம்பரியமாக அணியும் ‘மின்னு’ எனப்படும் மாங்கல்ய நகையைப் போன்றே இருப்பதாகப் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக த்ரிஷாவிற்குத் திருமணம் முடிந்துவிட்டதா என்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அதேநேரத்தில், த்ரிஷா தற்பொழுது நடித்து வரும் ஏதேனும் ஒரு புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக இந்த நகையை அவர் அணிந்திருக்கலாம் என்றும், அதனால் தான் படப்பிடிப்புத் தோற்றம் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக எமோஜி வைத்து மறைத்துள்ளார் என்றும் அவரது ரசிகர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.
