“மகன் செய்த பாலியல் அராஜகம்…” ஆசிரியரின் தந்தையை ஓட ஓட விரட்டி அடித்த கோபக்கார பெண்கள்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மகன் செய்த பாலியல் அராஜகம்…” ஆசிரியரின் தந்தையை ஓட ஓட விரட்டி அடித்த கோபக்கார பெண்கள்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..!!

Published

on

தனது உறவினர் வீட்டுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர் ஒருவரைத் தேடிச் சென்ற சிறுமியின் குடும்பத்துப் பெண்கள், அங்கு அவர் இல்லாததால் அவரது தந்தையான ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரை நடுரோட்டில் செருப்பால் அடித்து வெளுத்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வரும் நபர் ஒருவர், தனது சொந்த உறவினரின் மகளான சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த அநாகரிகச் செயலறிந்து ஆத்திரமடைந்த சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதிப் பெண்கள், அந்த ஆசிரியருக்குத் தகுந்த பாடம் புகட்டுவதற்காக அவரது வீட்டிற்குத் திரண்டு சென்றுள்ளனர்.

ஆனால், குற்றம் சாட்டப்பட்ட பள்ளி ஆசிரியர் வீட்டில் இல்லாததால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரின் கண் முன்னாலேயே, அந்த ஆசிரியரின் தந்தையான ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரை அங்கிருந்த பெண்கள் செருப்பால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். “மகன் செய்த தப்பிற்குத் தந்தை என்ன செய்வார்?” என்ற கேள்வியையும் தாண்டி, குற்றவாளியைப் பாதுகாக்க முயன்றதாக ஓய்வு பெற்ற அதிகாரி மீது குற்றம் சாட்டிப் பெண்கள் இந்த அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளனர். போலீஸார் தடுத்தும் கேட்காமல், கோபத்தின் உச்சியில் இருந்த பெண்கள் அந்தப் முதியவரை ஓட ஓட விரட்டி அடித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in