கேமரா முன் நடித்தால் போதும்….! நிஜ வாழ்க்கையில் அது தேவையில்லை….. காதல் குறித்து ராகுல் ப்ரீத் சிங் பளீர்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கேமரா முன் நடித்தால் போதும்….! நிஜ வாழ்க்கையில் அது தேவையில்லை….. காதல் குறித்து ராகுல் ப்ரீத் சிங் பளீர்….!!!

Published

on

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பிரபலமாக நடித்து வருபவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில் தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். அதை தொடர்ந்து கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இவர் ஹிந்தி நடிகர் ஜாக்கி பக்னாணியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இதைப் பார்த்த பலரும் இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்று கூறி வந்தனர். தற்போது காதல் உறவு குறித்து ரகுல் ப்ரீத் சிங் அளித்துள்ள பேட்டியில் சிலர் தங்கள் காதல் குறித்து வெளிப்படையாக பேசாமல் இருப்பது ஒரு வித மனநிலை. நான் அப்படி கிடையாது. காதலை வெளிப்படுத்தினேன். என் வாழ்க்கையை இரட்டை வழியில் கொண்டு செல்ல விரும்பவில்லை.

Advertisement

கேமரா முன் நடித்தால் போதும், நிஜ வாழ்க்கையில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன். எல்லோருக்கும் வாழ்க்கையின் துணை முக்கியம். நானும் ஜாக்கியும் எங்கள் உறவில் இயல்பாகவும், ஆக்கபூர்வமாகவும் உள்ளோம். இது பாதுகாப்பான உறவை ஏற்படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதிலும் ஒருமித்த கருத்தோடு இருக்கின்றோம். வாழ்க்கை மிகவும் எளிமையானது. பயத்தின் காரணமாக சில விஷயங்களை மறைத்து சிக்கல் ஆக்குகின்றனர். எனக்கு அந்த பயம் கிடையாது. நான் அதனால் நான் என் காதலை மறைக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார் .

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in