ஹிந்தியில் ஒரு காலத்தில் பெரிய நடிகை….! தற்போது தெருவில் பிச்சை….. என்ன கொடுமை சரவணன் இது….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஹிந்தியில் ஒரு காலத்தில் பெரிய நடிகை….! தற்போது தெருவில் பிச்சை….. என்ன கொடுமை சரவணன் இது….!!!!

Published

on

ஹிந்தியில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நுபுர் அலங்கர். இவர் சக்திமான் உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்த பிரபலமானவர். சுமார் 27 வருடங்களாக திரைப்படத்தில் நடித்து வந்த இவருக்கு தற்போது 49 வயதாகின்றது. நடிகை என்பதை தாண்டியும் கோடிக்கணக்கில் சொத்தும் அவருக்கு உள்ளது.

இதனிடையே சினிமா துறையை விட்டு ஒட்டு மொத்தமாக விலகிய இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சன்னியாசியாக மாறிவிட்டார் என்று தகவல் வெளியானது. இனிமேல் சினிமாவில் தொடர்ந்து நடிக்க மாட்டேன் என்றும், தற்போது இயல்பான வாழ்க்கையில் நிம்மதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Advertisement

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் கோவர்தன் அருகே ஒரு தங்களடி என்னும் பகுதியில் காவி உடை அணிந்து யாசகம் செய்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர் நான் ஒரு நாளில் யாசகம் செய்து பெற்ற பணத்தை குறிப்பிடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதனுடன் நபர் ஒருவரிடம் இருந்து யாசகம் பெறும் புகைப்படத்தை பகிர்ந்த அவர் தனது யாசக கிண்ணம் மற்றும் அதில் பணம் இருப்பது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்தார். பிச்சை கிடைப்பதால் பணம் கிடைக்கின்றது என்றும், தற்போது வாழ்க்கை இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கின்றது என்று தெரிவித்தார். தான் யாசகம் செய்த முதல் நாள் இது என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலானது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in