சூடுபிடிக்கும் குதிரை பேர வழக்கு..! அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி மறுப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சூடுபிடிக்கும் குதிரை பேர வழக்கு..! அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி மறுப்பு..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், தங்களை திமுகவில் இணைப்பதற்காக ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தியிருந்தார். இந்த நிலையில், தவெக MLA சரவணன் வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டை அனிதா ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மேலும் இது குறித்துப் பேசிய அவர், இது முற்றிலும் தவறான ஒரு கருத்து என்றும், தாங்கள் யாரிடமும் எந்தவிதமான பேரமும் பேசவில்லை என்றும் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாகச் சில புகைப்படங்கள் மற்றும் ஆடியோ ஆதாரங்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

ஏற்கனவே தமிழக அரசியல் சூழலில் குதிரை பேர வழக்கு என்பது தீவிரமாகச் சூடுபிடித்துள்ள நிலையில், அடுத்தடுத்து வெளியாகி வரும் இத்தகையப் புகார்களும், அதற்கு அளிக்கப்படும் மறுப்பு அறிக்கைகளும் தற்போது அரசியல் களத்தில் பெரும் கவனத்தைப் பெற்று வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in