இப்போ முதல்வர் விஜய் வாயில புண் வந்திருச்சோ… கை, கால்களை லுங்கியால் கட்டி கொடூரமா அடிச்சிருக்காங்க… தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட திமுக ஐடி விங்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இப்போ முதல்வர் விஜய் வாயில புண் வந்திருச்சோ… கை, கால்களை லுங்கியால் கட்டி கொடூரமா அடிச்சிருக்காங்க… தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட திமுக ஐடி விங்..!!

Published

on

நாகர்கோவில் கிளைச் சிறையில் மாற்றுத்திறனாளி விசாரணை கைதியான சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது கை மற்றும் கால்களை லுங்கியால் கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கியது சிபிசிஐடி (CB-CID) போலீசாரின் தீவிர விசாரணையில் தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக ஐடி விங் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் தமிழக அரசை மிகக் கடுமையாகச் சாடிப் பதிவிட்டுள்ளது. சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் சக கைதிகளின் இத்தகைய கொடூரச் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள அந்த எக்ஸ் பதிவில், “திமுக ஆட்சிக் காலத்தில் எதேச்சையாக நடந்த தவறுகளுக்குக் கூட, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அன்றைய முதலமைச்சர் மன்னிப்பு கேட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அன்று அதனை “சாரி மா மாடல் ஆட்சி” என்று கிண்டல் செய்த முதலமைச்சர் விஜய், இன்று தன் ஆட்சியில் நடந்துள்ள இத்தகைய கொடூரமான காவல் மரணத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்காமல் இன்னும் கள்ளமௌனம் காப்பது ஏன் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், “மௌனம் காப்பதற்கு உங்களுக்கு வாயில் புண் வந்துவிட்டதா?” என மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளது.

Advertisement

முதலமைச்சர் “கோட்டு கோபால் வர்மா” என்ற பெயரில் ஆய்வு என்ற அலப்பறைகளை மட்டும் செய்யாமல், காவல் மற்றும் சிறைத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் என்ற முறையில் இந்த மரணத்திற்கு உரிய முறையில் பொறுப்பேற்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது. ஒரு திரைப்படத்தை இரண்டு முறை பார்க்கும் அளவுக்கு உங்களுக்கு நேரம் இருக்கும்போது, அரசியல் பொறுப்புடைமை என்றால் என்ன என்பதை அருகில் இருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் தமிழகத்தில் இதுபோன்ற கொடூரமான காவல் நிலைய மரணங்கள் நிகழாமல் தடுக்கத் தேவையான உடனடி நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றும் அந்தப் பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in