விஜய்க்கு ஷாக்..! தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கு பின் தவெக அரசு கலைக்கப்படும்… அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ உமாதேவன் பரபரப்பு பேச்சு..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய்க்கு ஷாக்..! தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கு பின் தவெக அரசு கலைக்கப்படும்… அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ உமாதேவன் பரபரப்பு பேச்சு..!

Published

on

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு நிச்சயமாக முற்றுப்புள்ளி உண்டு என்றும், அது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூலமாகவே நிகழும் என்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.கே.உமாதேவன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய தவெக அரசை நடிகர் விஜய் நடித்த ‘சர்க்கார்’ திரைப்படத்துடன் ஒப்பிட்டு விமர்சித்தார். படத்தில் ஒரு நாள் மட்டும் முதலமைச்சராக வந்துவிட்டுச் செல்வது போன்ற ஒரு சூழலே தற்போதைய அரசியல் களத்திலும் நிலவுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

மேலும், தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளான தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தவெக ஆட்சி கலைக்கப்படும் என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in