LATEST NEWS
அதிர்ச்சி..! இ-ரிக்ஷாவைத் தொடர்ந்து.. அடுத்து ஏடிஎம்க்கும் குறி? இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி காட்சி..! வெளியான பகீர் பின்னணி..!!
சமீபத்தில் மொபைல் செயலி மூலம் சாலையில் சென்று கொண்டிருந்த இ-ரிக்ஷாவை தூரத்திலிருந்து கட்டுப்படுத்தி நிறுத்துவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதனால் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சம் காரணமாக, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து ‘BAT-BMS’ போன்ற சீன செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கியது. இந்தச் சர்ச்சை அடங்குவதற்குள், தற்போது மொபைல் செயலி மூலம் ஏடிஎம் இயந்திரத்தை ஆன் மற்றும் ஆஃப் செய்ய முடியும் என்று உரிமை கொண்டாடும் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வைரல் வீடியோவில், ஒரு நபர் தனது மொபைலில் உள்ள ஒரு செயலியைப் பயன்படுத்துகிறார். அவர் தூரத்திலிருந்து மொபைல் திரையில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தும்போது, அவருக்கு முன்னால் இருக்கும் ஏடிஎம் இயந்திரம் திடீரென ஆஃப் ஆகி மீண்டும் ஆன் ஆகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்கள் அதிர்ச்சியடைந்து, டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் வங்கி அமைப்புகளின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DactRLysNmN/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இதுவரை எந்தவொரு வங்கியோ அல்லது அரசு பாதுகாப்பு அமைப்போ அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை. தொழில்நுட்ப வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்த வீடியோவில் ஏடிஎம் இயந்திரம் எதுவும் ஹேக் செய்யப்படவில்லை; மாறாக, சீன தயாரிப்பான அந்த ஏடிஎம் இயந்திரத்தின் பேட்டரியில் உள்ள ‘BMS’ தொழில்நுட்பமே மொபைல் செயலி மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, இதுபோன்று திட்டமிட்டு உருவாக்கப்படும் அல்லது தவறாக வழிநடத்தும் வீடியோக்களைப் பார்த்து பொதுமக்கள் உடனே அச்சப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
