“தலைகுனிவோடு வந்துள்ளேன்” முதல்வர் விஜய் முன்னிலையில் மேடையிலேயே உடைந்த வைகோ… தழுதழுத்த குரலில் அவர் சொன்ன அந்த விஷயம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தலைகுனிவோடு வந்துள்ளேன்” முதல்வர் விஜய் முன்னிலையில் மேடையிலேயே உடைந்த வைகோ… தழுதழுத்த குரலில் அவர் சொன்ன அந்த விஷயம்…!!

Published

on

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக அரசின் முதல் தோழமைக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். முதலமைச்சர் விஜய் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தனது உத்தரவை மீறி கூட்டத்திற்கு வர மறுத்த மதிமுகவின் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து அவர் தனது மனவேதனையை வெளிப்படுத்தினார்

வைகோ தனது உரையில், “தன்னை மதிமுக எம்.எல்.ஏக்கள் புறக்கணித்ததால், இந்த மேடையில் தலைகுனிவோடு அமர்ந்திருப்பதாகக்” கூறி அதிரவைத்தார். திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற அந்த எம்.எல்.ஏக்கள், தற்போதைய புதிய அரசியல் சூழலில் தவெக-விற்கான ஆதரவில் தயக்கம் காட்டுவதாக அவர் தழுதழுத்த குரலில் குறிப்பிட்டார்.

Advertisement

கட்சி எம்.எல்.ஏக்கள் தங்களை புறக்கணித்தாலும், ப.சிதம்பரம் போன்ற தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வைகோ கலந்துகொண்டார். சொந்தக் கட்சி எம்.எல்.ஏக்களின் அதிருப்தியை முதல்வர் முன்னிலையிலேயே வைகோ போட்டுடைத்தது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in