MLA-க்களை விலை பேசுவோருக்கு.. இது தான் நடக்கும்.. கடும் எச்சரிக்கை விடுத்த அமைச்சர் செங்கோட்டையன்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

MLA-க்களை விலை பேசுவோருக்கு.. இது தான் நடக்கும்.. கடும் எச்சரிக்கை விடுத்த அமைச்சர் செங்கோட்டையன்..!!!

Published

on

தமிழக வெற்றிக் கழக MLA-க்களிடம் திமுகவினர் குதிரை பேரம் பேசி ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஊத்தங்கரை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரிடம் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தின் போது தங்களுக்கு ஆதரவாக செயல்பட ₹35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக கூறப்பட்டது. இதன் பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் இருந்ததாக கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசுவது மற்றும் குதிரை பேரம் நடத்துவது தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் வெட்கக்கேடான விஷயம் என சாடியுள்ளார். எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டு மக்கள் நலன் பேச வேண்டியவர்கள் இதுபோன்ற சதிகளில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டிய அவர், MLA-க்களை விலை பேசுவோருக்கு காவல்துறையின் மூலம் கடுமையான தண்டனை கிடைக்கும் என எச்சரித்துள்ளார். மேலும், தவெக அரசு மீது திமுகவினர் வீண்பழி சுமத்துவதாகவும், தூய்மையான தவெக ஆட்சியை எதிர்க்கட்சிகள் சீர்குலைக்க சதி செய்வதாகவும் அவர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in