LATEST NEWS
நீங்க வந்துதான் தவெக-வை காப்பாற்ற வேண்டுமா..? அப்படி ஒன்னும் அவசியமில்லை… செங்கோட்டையன் அனல் பறக்கும் பதிலடி..!!
முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், திமுகவைச் சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணனின் குற்றச்சாட்டுகளுக்குக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணையுமாறு தமக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக அனிதா ராதாகிருஷ்ணன் அண்மையில் கூறியிருந்தார். இதற்குப் பதில் அளித்துள்ள செங்கோட்டையன், அனிதா ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் வந்துதான் தவெகவையோ அல்லது அதன் ஆட்சியையோ காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எதுவும் அங்கு இல்லை என்று சாடியுள்ளார்.
அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளிலும் அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணனின் மனநிலை, தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார். தவெக ஆட்சி மற்றும் கட்சிக்கு அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவு தேவையில்லை என்ற நோக்கில் செங்கோட்டையன் பேசியுள்ள இந்த கருத்துக்கள், தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
