LATEST NEWS
பகீர்..! விஷ்ணு ரெட்டி, ஜான் ஆரோக்கியசாமி செஞ்ச தப்பு… லீக்கான முக்கிய ரகசியங்கள்… தவெக ஆட்சி கவிழ்வது உறுதி… புயலை கிளப்பிய அதிமுக இன்பதுரை..!!
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பத்துரை, தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு கவிழ்வது உறுதி என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கடந்த 1991-ஆம் ஆண்டில் அரசின் ரகசியங்கள் கசிந்த புகாரால் அப்போதைய திமுக ஆட்சி கலைக்கப்பட்டது போன்ற ஒரு சூழல் தற்போதும் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தவெக தரப்பினர் அதிமுக எம்.எல்.ஏ-க்களைக் குதிரை பேரம் பேசி விலைக்கு வாங்கி வருவதாகத் தமிழக ஆளுநரிடம் அவர் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.
அமைச்சர்வை கூட்டத்தில் விஷ்ணு ரெட்டி மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் பங்கேற்றது ரகசியக் காப்புப் பிரமாணத்தை மீறிய செயல் என்றும், இதன் மூலம் அரசின் மிக முக்கிய ரகசியங்கள் கசிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விதிமீறல்களின் காரணமாகவே தவெக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
