LATEST NEWS
BREAKING: கரூர் வழக்கு… திமுகவின் இடையீட்டு மனு தள்ளுபடி..!!!
கரூர் துயரம் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேசுவதற்குத் தடை விதிக்கக் கோரி திமுக தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், நீதிமன்ற விசாரணையின் போது, அந்தத் தடை கோரும் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக திமுக தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
திமுகவின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், தடையாணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் விசாரணையின்போது திமுக வழக்கறிஞர் விஜய் மீது குற்றம் சாட்டப்பட்டவர் என்று வாதிட்டார். அதற்கு குறுக்கிட்ட நீதிபதிகள், FIR-ல் விஜய் குற்றம் சாட்டப்பட்டவராகக் குறிப்பிடப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், உச்ச நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர்.
