LATEST NEWS
சிம்புவால் கழண்டுகொண்ட ஜெயம் ரவி… ஏதோ உள்குத்து இருக்கு…! தக்லைஃபில் இப்ப இன்னொரு ஹாண்ட்சம் ஹீரோ…!!!
கமலஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் தக்லைஃப் என்ற திரைப்படம் உருவாக இருக்கின்றது. நாயகன் திரைப்படத்திற்கு பிறகு 35 ஆண்டுகள் கழித்து மணிரத்தினம் மற்றும் கமலஹாசன் இருவரும் ஒன்றிணைவதால் ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் கமலஹாசன் உடன் சேர்ந்து துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரபட்டாலம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது.

#image_title
ஆனால் தற்போது ஒரு சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றது. அதாவது இது தேர்தல் நேரம் என்பதால் கமலஹாசன் அடிக்கடி பிரச்சாரம் தொடர்பாக சென்று வருகிறார். இதனால் துல்கர் சல்மான் அவரின் கால்ஷீட்டை மாற்ற முடியாததால் இந்த திரைப்படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகி இருக்கிறார். மேலும் ஜெயம் ரவிக்கும் இதே பிரச்சனை என்று கூறப்படுகின்றது.

#image_title
ஆனால் இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு இணைந்திருப்பதால் ஜெயம் ரவி இப்படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல்கள் பரவி வருகின்றது. ஏற்கனவே சிம்புவுக்கும் ஜெயம்ரவிக்கும் இடையே பிரச்சனை இருப்பதாகவும், இதனால் தான் சிம்பு கமிட்டான உடன் ஜெயம் ரவி கலந்து கொண்டார் என்று செய்திகள் பரவி வருகின்றது.
இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்று தொடர்ந்து மணிரத்தினம் யோசித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் அரவிந்த்சாமி அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என கூறப்பட்டு வருகின்றது. அரவிந்த்சாமியை தொடர்ந்து மற்றொரு நடிகரின் பெயரும் அடிபட்டு வருகின்றது. அவர் யார் என்றால் அருண் விஜய். விரைவில் இந்த திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகும்.
