LATEST NEWS
BREAKING: இன்று முதல் உதயநிதி ஸ்டாலின் “இளைய கருணாநிதி” ஏன் தெரியுமா..? ஆர்.எஸ் பாரதி பரபரப்பு அறிவிப்பு..!!
“இன்று முதல் உதயநிதி ஸ்டாலினை ‘இளைய கலைஞர்’ என்று மக்கள் அழைப்பதற்கான வழியை முதலமைச்சர் விஜய் வகுத்துக் கொடுத்துவிட்டார்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடியாகத் தெரிவித்துள்ளார் . அன்றைய காலகட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.கருணாநிதியை இதேபோல் நள்ளிரவில் அராஜகமாகக் கைது செய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றிப் பாளையங்கோட்டை சிறை வரை கொண்டு சென்ற வரலாற்றை அவர் இந்தச் சூழலில் நினைவு கூர்ந்துள்ளார் .
அன்று கருணாநிதிக்கு நடந்த அதே அடக்குமுறையைத்தான், இன்று அவரது பேரன் உதயநிதி ஸ்டாலினுக்கும் இந்த அரசு செய்துள்ளது என்று ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார் . மேலும், நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும் மீறி உதயநிதி ஸ்டாலினை அராஜகமாகக் கைது செய்த போலீஸ் அதிகாரிகளும், அதற்குப் பின்னணியில் இருந்து உத்தரவிட்ட ஆட்சியாளர்களும் இதன் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார் .
சென்னையில் நடைபெற்ற இந்த அவசரச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தற்போதைய தவெக அரசின் அடக்குமுறைகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது என்றும், இந்த கைது நடவடிக்கை உதயநிதி ஸ்டாலினின் அரசியல் ஆளுமையை மக்கள் மத்தியில் மேலும் உயர்த்தியுள்ளதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்
