படம் கண்டிப்பா ஓடாது…! “ஓடுச்சுன்னா சம்பளமே வேண்டாம்”…. சவால் விட்ட இளையராஜா, சாதித்து காட்டிய இயக்குனர்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

படம் கண்டிப்பா ஓடாது…! “ஓடுச்சுன்னா சம்பளமே வேண்டாம்”…. சவால் விட்ட இளையராஜா, சாதித்து காட்டிய இயக்குனர்…!!!

Published

on

தமிழ் திரையுலகின் மிகப்பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவரை இசைஞானி என்று அனைவரும் செல்லமாக அழைப்பார்கள். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய திரையுலகமே இவரது இசையை கொண்டாடி வருகின்றது. 70களில் தொடங்கி இன்று வரை பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்.

#image_title

இளையராஜாவின் இசைக்காகவே பல திரைப்படங்கள் சூப்பர் டிப்பர் ஹிட் கொடுத்துள்ளது. நடிகர்கள், இயக்குனர்கள், நடிகைகள் என எதுவும் முக்கியமில்லை என்றாலும் இசை இளையராஜாவின் பாடலால் மட்டுமே ஹிட் அடித்த திரைப்படங்கள் பல உண்டு. முன்னணி நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கு மட்டும்தான் இசையமைப்பேன் என்று இல்லாமல் அறிமுக இயக்குனர்கள், நடிகர்கள் என அனைவருக்கும் இசையமைத்து கொடுப்பவர் இளையராஜா.

#image_title

அதுமட்டுமில்லாமல் இளையராஜா பல இயக்குனர்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்திருக்கின்றார். அவர்களில் முக்கியமான ஒருவர்தான் பாரதிராஜா. இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய திரைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் பாரதிராஜாவின் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான திரைப்படம் முதல் மரியாதை.

#image_title

இந்த திரைப்படத்தின் போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் தான் தற்போது வெளியாகி உள்ளது. முதல் மரியாதை திரைப்படத்தை முடித்துவிட்டு பாரதிராஜா இளையராஜா இளையராஜாவிடம் கம்போசிங் செய்ய சென்று இருக்கின்றார். அப்போது இந்த திரைப்படத்தை பார்த்து இளையராஜா இப்படம் ஓடாது என்று கூறிவிட்டார். இல்லை இந்த திரைப்படம் நன்றாக ஓடும் என்று பாரதிராஜா கூறியிருக்கிறார் .

#image_title

இதை கேட்ட இளையராஜா அப்படி இந்த திரைப்படம் ஹிட்டானால் எனக்கு சம்பளமே வேண்டாம் கண்டிப்பாக இந்த படம் ஹிட்டாகாது என்று கூறியிருக்கிறார். ஆனால் இந்த திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்துள்ளது. சொன்னபடியே இளையராஜா இந்த திரைப்படத்திற்கு சம்பளமே வாங்க வில்லையாம். இந்த சுவாரசிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in