LATEST NEWS
உதயநிதி பேசினது தப்புதான்… அதுக்கு பாத்ரூமுக்குள்ள போய் கைது செய்வீர்களா.? தவெக அரசை சாடிய கே.பி.முனுசாமி..!!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும், அவர் குளியலறைக்குள் சென்றபோது கைது செய்திருப்பது எதிர்க்கட்சியினர் மீதான அரசின் அப்பட்டமான அடக்குமுறை என்று அதிமுக முக்கியத் தலைவர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும், எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தி பயமுறுத்துவதற்காகவே தற்போதைய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும் அவர் சாடியுள்ளார்.
ஒருவரைக் குளியலறைக்குச் சென்ற இடத்தில் வைத்து கைது செய்வது என்பது மனித உரிமை மீறல் மற்றும் மிக மோசமான அடக்குமுறை ஆகும் என்று அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக வெற்றிக் கழக அரசுக்கும் திமுகவிற்கும் இடையே அரசியல் மோதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், அதிமுக மூத்த தலைவரிடமிருந்து வெளிவந்துள்ள இந்த கண்டன அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
