LATEST NEWS
நாங்க என்ன தீவிரவாதியா..? ரத்தம் வர்ற அளவுக்கு லத்தியால அடிச்சிருக்கீங்க… கொந்தளித்த மேயர் பிரியா..!!
திமுக தொண்டர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யும் அளவிற்கு நாங்கள் என்ன தீவிரவாதியா?” என்று சென்னை மேயர் பிரியா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். தியேட்டருக்குச் சென்று ‘ஜனநாயகன்’ படம் பார்த்து அழுகிறார்கள், ஆனால் இன்று நிஜத்தில் ரத்தம் வரும் அளவிற்குப் போலீசாரை வைத்து அடித்திருக்கிறார்கள் என்று தவெக அரசை அவர் சாடியுள்ளார். இதுதான் ஜனநாயகமா என்றும், போலீஸ் உங்கள் கையில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய அரசின் இந்த அராஜக அரசியலைக் கண்டு தாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் கைது மற்றும் திமுகவினர் மீதான போலீஸ் தடியடிக்கு எதிராகச் சென்னை மேயர் பிரியா வெளியிட்டுள்ள இந்த ஆவேசமான அறிக்கை, தற்போதைய அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
