ரஜினி 171…! “போஸ்டர் போட்டு கன்பியூஸ் பண்ண லோகேஷ்”… தலைவர் கையில் இருக்கும் வாட்சின் ரகசியம்?…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ரஜினி 171…! “போஸ்டர் போட்டு கன்பியூஸ் பண்ண லோகேஷ்”… தலைவர் கையில் இருக்கும் வாட்சின் ரகசியம்?…!!!

Published

on

சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் முதலில் நம் நினைவுக்கு வருவது ரஜினிகாந்த் அவர்கள் தான். தமிழ் சினிமாவில் தற்போது வரை ஹீரோவாக கொடிகட்டி பறந்து வரும் ரஜினிகாந்த் கடைசியாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுத்தது. தொடர்ந்து ஹிட்டுக்காக காத்துக் கொண்டிருந்த ரஜினி அவருக்கு ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

#image_title

கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த கலாநிதி மாறன் ரஜினிக்கு பிஎம்டபிள்யூ கார் ஒன்றைக் கூட பரிசாக கொடுத்திருந்தார். ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 171 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

#image_title

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. கமலஹாசனுக்கு எப்படி ஒரு ஹிட்டு திரைப்படத்தை கொடுத்தோமோ அதே போல் ரஜினிகாந்துக்கும் கொடுக்க வேண்டும் என்று மிகவும் பிஸியாக வேலை பார்த்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் சமீபத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அந்த போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் கையில் கடிகாரம் ஒன்றை வைத்திருப்பதை பார்த்தோம். இதைப் பார்த்த பலரும் ஒருவேளை டைம் டிராவல் படமாக இருக்குமோ? என்று யோசிக்க தொடங்கி விட்டார்கள். அது மட்டும் இல்லாமல் மறுபடியும் கேங்ஸ்டர் ஃபார்முலாவை தான் லோகேஷ் கனகராஜ் எடுக்கப் போகிறாரோ? என்றும் இஷ்டத்துக்கு பேச தொடங்கி இருக்கிறார்கள்.

Advertisement

#image_title

ஆனால் அந்த போஸ்டரின் பின்னணி என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. கைதி திரைப்படம் போன்று இந்த திரைப்படமும் ஒரு நாளில் நடக்கக்கூடிய கதையாக இருக்கும் என்றும், அதை சொல்லும் முறையில்தான் கடிகாரத்தை போஸ்டரில் கொண்டு வந்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ் என கூறி வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக அல்லது மிலிட்டரி ஆபீஸராக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகின்றது.