நம்ம அடுத்த படம் LCU தான்.. நடிப்பு ஜாம்பவான்களை களமிறக்கும் லோகேஷ்..? படம் வேற லெவலில் இருக்க போகுதாம்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நம்ம அடுத்த படம் LCU தான்.. நடிப்பு ஜாம்பவான்களை களமிறக்கும் லோகேஷ்..? படம் வேற லெவலில் இருக்க போகுதாம்..!!

Published

on

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. லோகேஷ் கனகராஜ் தனக்கென ஒரு தனி ஸ்டைலாக சினிமாட்டிக் யுனிவர்ஸ் LCU ஒன்றை உருவாக்கினார்.

அவர் இயக்கிய விக்ரம், லியோ, கைதி ஆகிய படங்கள் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் தலைவர் 171-வது படத்தை இயக்கி வருகிறார்.

Advertisement

மேலும் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் லோகேஷ் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் LCU-வை மையமாக வைத்து லோகேஷ் 10 முதல் 20 நிமிட நேரத்திற்குள் ஒரு குறும்படத்தை இயக்க உள்ளாராம். அதற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

லோகேஷ் இயக்கும் குறும்படத்தில் காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், நரேன், ஹரிஷ் உத்தமன் கமல் மற்றும் சூர்யா ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. இது உண்மையாக இருந்தால் கைதி-2 படத்திற்கு முன்னே குறும்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement