உங்களுக்கு 45 வயசுன்னு சொல்ல முடியாது.. வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் ஜோதிகா.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

உங்களுக்கு 45 வயசுன்னு சொல்ல முடியாது.. வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் ஜோதிகா.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

Published

on

பிரபல நடிகையான ஜோதிகா கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் அஜித், ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். குஷி திரைப்படம் ஜோதிகாவின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இவர் பிரபல நடிகர் ஆன சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு ஜோதிகா தனது குடும்பத்தை கவனித்துக் கொள்வதில் சிறப்பு கவனம் செலுத்தினார். இவர்களுக்கு தியா, தேவ் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா 36 வயதினிலே திரைப்படம் மூலம் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுத்தார். வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை ஜோதிகா தேர்ந்தெடுத்து நடித்தார்.

Advertisement

 

அந்த வகையில் நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி உள்ளிட்ட பல்வேறு படங்களில் ஜோதிகா நடித்தார். தற்போது குடும்பத்துடன் சூர்யா ஜோதிகா தம்பதியினர் மும்பையில் செட்டில் ஆகிவிட்டனர். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா ஹிந்தி சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

Advertisement

ஜோதிகா அஜய் தேவ்கன், மாதவனுடன் சைத்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது உடல் எடையை குறைத்து பிட்டாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜோதிகா வெறித்தனமாக ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்து ரசிகர்கள் 45 வயதாகியும் இவ்வளவு சுறுசுறுப்பாக ஜோதிகா ஒர்க் அவுட் செய்கிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Jyotika (@jyotika)

Advertisement
Continue Reading
Advertisement