LATEST NEWS
ஹீரோக்களுக்கே டஃப் கொடுப்பாங்க போல.. நடிகை ஸ்ருதிஹாசனின் ஹெவி ஒர்க் அவுட்.. வைரலாகும் வீடியோ..!!

உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் ஆரம்ப காலகட்டத்தில் சினிமா பாடல்களை பாடி வந்தார். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார்.
இதனையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பழமொழிகளில் ஸ்ருதிஹாசன் நடித்தார். ஸ்ருதிஹாசன் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
சுருதிஹாசன் 3 படத்தில் இடம்பெற்ற கண்ணழகா கால் அழகா, மான் கராத்தே படத்தில் இடம் பெற்ற உன் விழிகளில், புலி படத்தில் இடம்பெற்ற ஏண்டி ஏண்டி, வேதாளம் படத்தில் இடம்பெற்ற டோன்ட் மெஸ் உள்ளிட்ட பல்வேறு பாடல்களை பாடி உள்ளார்.
சமீபத்தில் கிருத்திகா உதயநிதி இயக்கும் காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடலையும் சுருதிஹாசன் பாடியது குறிப்பிடத்தக்கதாகும். நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் உடல் ஆரோக்கியத்திலும் சுருதிஹாசன் மிக கவனமாக இருப்பார். இந்த நிலையில் ஹெவியாக ஸ்ருதிஹாசன் ஒர்க்அவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram