விஜயின் GOAT படத்தில் மீனாட்சி சவுத்ரியின் கதாபாத்திரம்..? இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்த புதிய அப்டேட்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜயின் GOAT படத்தில் மீனாட்சி சவுத்ரியின் கதாபாத்திரம்..? இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்த புதிய அப்டேட்..!!

Published

on

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் கோட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மைக் மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே கோட் படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோட் படத்தின் ஷூட்டிங்கை ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டனர். ஆனால் அதில் சில சிக்கல்கள் இருப்பதால் ஹைதராபாத்தில் ஒரு சில காட்சிகளை எடுக்க முடிவு செய்துள்ளனர். கோட் படம் விஜய்யை இரண்டு வேடங்களில் நடிக்க வைத்து டைம் ட்ராவலை கதைக்களமாக கொண்டுள்ளது.

Advertisement

கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் மீனாட்சி சவுத்ரி அவுட் ஆப் லவ் என்ற வெப் சீரிஸ் மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். அவர் மூன்று தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். ஆர்.ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்திலும் மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் மீனாட்சி சவுத்ரிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். மேலும் விஜயின் கோட் படத்தில் மீனாட்சி சவுத்திரியின் கதாபாத்திரத்தின் பெயர் ஸ்ரீநிதி என்பதையும் குறிப்பிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் மீனாட்சி சவுத்திரிக்கு கோட் படத்தில் ஸ்ரீநிதி என்ற பெயரா என கேட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement