“என் மகளுடன் நானும் இறந்து விட்டேன்”.. செல்ல மகளின் மறைவுக்குப் பிறகு விஜய் ஆண்டனியின் உருக்கமான பதிவு..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் மகளுடன் நானும் இறந்து விட்டேன்”.. செல்ல மகளின் மறைவுக்குப் பிறகு விஜய் ஆண்டனியின் உருக்கமான பதிவு..!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் விஜய் ஆண்டனி பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு மீரா மற்றும் லாரா என்ற இரண்டு மகள்கள் உள்ளன. அதில் மூத்த மகளான மீரா சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அன்பு நெஞ்சங்களே என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள்.

Advertisement

அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி மதம் பணம் பொறாமை வலி வறுமை வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்துக்கு தான் சென்றுள்ளார். என்னிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்து விட்டேன்.. நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன். அவளுடைய பெயரில் நான் செய்யப் போகும் அனைத்து நல்ல காரியங்களையும் அவளே தொடங்கி வைத்தால் என்ற விஜய் ஆண்டனி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

 

Advertisement

Advertisement