CINEMA
அப்போ நான் படுக்கணுமா…? ஜாக்குலின்-சுனிதா இடையே வெடித்த சண்டை…. வெளியான பரபரப்பு புரோமோ…!!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று முதல் ஆரம்பமாகிவிட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்கள் என வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டிற்கு நடுவில் கோடு போடப்பட்டுள்ளது. எனவே தற்போது ஆண்கள் ஒரு பக்கம் மற்றும் பெண்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர்.
நேற்று 24 மணி நேரத்தில் சஞ்சனா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனையடுத்து டாஸ்க் தொடங்கிவிட்டது. இந்நிலையில் ஆண்கள் அணிக்காக விளையாட ஒருவரை பெண்கள் பக்கமும், பெண்கள் அணிக்காக விளையாட ஒருவரை ஆண்கள் பக்கமும் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டது. இதனால் யாரை அனுப்புவது என்ற விவாதத்தில் ஜாக்குலின் நான் விளையாட கூடாது. அந்த பெட்லையே படுத்து கிடக்கணும்னு நினைக்கறீங்க என்று கூறினார். அதற்கு சுனிதா நீங்க பெட்ல படுங்க… இல்ல வெளியில படுங்க அது வேணாம். ஆனா டீமோட நல்லது தான் நமக்கு வேணும் என்று கூறியுள்ளார். இதனால் முதல் நாளே சண்டை வெடித்துள்ளது.