CINEMA
BiggBoss8: பிளவுஸ் தைக்க சென்னைக்கு வந்தீங்களா…? தர்ஷா குப்தாவை கலாய்த்த ரவீந்தர்…!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று முதல் ஆரம்பமாகிவிட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்கள் என வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டிற்கு நடுவில் கோடு போடப்பட்டுள்ளது. எனவே தற்போது ஆண்கள் ஒரு பக்கம் மற்றும் பெண்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர்.
பிக்பாஸ் சொல்லும் வரை இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னதாக தர்ஷா குப்தா தான் பிளவுஸ் தைக்க தான் சென்னை வந்ததாகவும், அங்கு தான் அழகாக இருப்பதால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் பேசிய ரவீந்தர் தர்ஷாவிடம், பிளவுஸ் தைக்க தான் சென்னை வந்தேன்னு சொன்னீங்கல்ல. அது உங்க இன்ஸ்டா page பார்த்தா தெரியலயே என்று கடுமையாக கலாய்த்துள்ளார்.