CINEMA
கார் ரேஸில் மீண்டும் உங்களை பார்ப்பதில் ரொம்ப சந்தோசம்…. அஜித்துக்கு வாழ்த்து கூறிய ஷாலினி…!!!

தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகர்களுள் ஒருவர் தான் நடிகர் அஜித். இவர் தற்போது ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, பைக் ரேஸில் ஆர்வம் கொண்ட அவர் பல்வேறு இடங்களுக்கு பயணங்கள் மேற்கொண்டும் வருகிறார். தற்போது பைக் ரேஸில் களமிறங்கவுள்ளார். அதற்கான அணியையும் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி வாழ்த்து தெரிவித்து பதிவு போட்டுள்ளார். அதாவது, கார் ரேஸ்ல் மீண்டும் நீங்கள் களமிறங்குவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் விரும்புவதை செய்கிறீர்கள். உங்களுக்கும் உங்களுடைய அணிக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.