CINEMA
என்னை வாழ வைப்பது அது மட்டும் தான்…. நடிகை ரக்ஷிதா எமோஷனல் பதிவு…!!
நடிகை ரச்சிதா மஹாலட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். அதன்பிறகு ரச்சிதா நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்தார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா போட்டியாளராக கலந்து கொண்டார். ஒரு கட்டத்தில் ரச்சிதா சீரியல்களில் இருந்து விலகி கன்னட படங்கள் நடித்தார். பின்னர் மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த ரச்சிதா ஜீ தமிழில் ஒளிபரப்பான சீரியலில் குழந்தைக்கு அம்மாவாக நடித்தார்.இவர் உப்பு கருவாடு உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ரச்சிதா சின்னத்திரை நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதனையடுத்து தற்போது சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் இவர் சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்ட வீடியோவில் கேமரா தான் என்னுடைய வாழ்க்கை. என்னை உயிரோடு வாழ வைப்பது என் வேலை மட்டுமே என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram