Uncategorized
இவங்களுக்கு நான் தான் வாழ்க்கை கொடுத்தேன்னு சொல்ல மாட்டேன்…. சர்ச்சையை கிளப்பிய சிவகார்த்திகேயன்…!!!
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் கொட்டுகாளி படம். ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக வுள்ளது . சூரி, அண்ணா பென் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் கூழாங்கல் படத்தை பார்த்துவிட்டு எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பின் அதைப் பற்றி பேசி புரிந்து கொண்டேன் .
இந்த படத்தின் கதையை கேட்காமல் நான் இந்த படம் தயாரிக்க சம்மதித்தன் காரணம் இயக்குனர் வினோத் ராஜ் தான். இந்த படம் எடுத்ததற்கான காரணம் முதலில் வினோத் ராஜை கொண்டாட தான். என் வாழ்க்கை அமைத்துக் கொடுத்த இந்த சினிமாவிற்கு நான் செய்யும் சேவைகளாக இது போன்ற படங்களை தயாரிக்க நினைக்கிறேன்.
நான் யாரையும் கண்டுபிடித்து இவங்களுக்கு நான் தான் வாழ்க்கை கொடுத்தேன், வாழ்க்கை கொடுத்தேன் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் என்னை அப்படி சொல்லி சொல்லி பழகி விட்டார்கள் என்று கூறியுள்ளார். நடிகர் தனுஷை மறைமுகமாக சாடினாரா இல்லை விஜய் டிவியை கூறுகிறாரா என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.