21 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு செயலை செய்த முதல் சினிமா நடிகர்… கமல்ஹாசன் பற்றி நெகிழ்ச்சியான பதிவு போட்ட ஸ்ருதிஹாசன்..!! - Cinefeeds
Connect with us

Uncategorized

21 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு செயலை செய்த முதல் சினிமா நடிகர்… கமல்ஹாசன் பற்றி நெகிழ்ச்சியான பதிவு போட்ட ஸ்ருதிஹாசன்..!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். உலக அளவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படம் சுமார் 450 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் பிசியாக நடித்து வருகிறார்.

இயக்குனர் சங்கர் இயக்கும் இந்த திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து தற்போது ஸ்கெட்ச் வினோத் இயக்கத்தில் தனது 233 வது படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார். அதன் பிறகு மணிரத்தினம் இயக்கம் 234 ஆவது திரைப்படத்தில் கமல் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன் 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தனது ராஜ்கமல் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் தனது உடலை தானம் செய்வதற்கான உறுதி பத்திரத்தில் கையெழுத்து விட்டார். ஸ்ருதிஹாசனும் அதற்கு சாட்சி கையெழுத்திட்ட விரைவில் உலகத்திலேயே திரைப்பட கலைஞர்களில் முதல் முதலாக உடல் தானம் செய்தவர் கமல்ஹாசன் தான். தற்போது அந்த பதிவை சுருதிஹாசன் பகிர்ந்துள்ள நிலையில் தற்போது அது வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

sakthi – shrutihaasan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@shrutzhaasanfansblood_)