Uncategorized
ஜெயிச்சிட்ட மாறா.. ரோட்டர்டேம் ஃபிலிம் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் நடந்த அதிசயம்.. அதிர்ந்து போன விடுதலை படக்குழு..வைரலாகும் வீடியோ..
வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவான வரலாற்று நாடக குற்றவியல் திரில்லர் திரைப்படம் “விடுதலை”. இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இதில் பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், ராஜீவ் மேனன், சேந்தன் என பலர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளார்கள்.
இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்துள்ளது. நடிகர் சூரி பல படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தாலும் சினி உலகில் தனக்கென அங்கீகாரத்தை பெறவில்லை என்ற ஏக்கம் இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் இந்தத் திரைப்படத்தின் மூலம் நடிகர் சூரி சினியுலகில் தனக்கான பிடித்துள்ளார்.
மேலும் இந்தத் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று வெற்றிமாறன் பல இடங்களில் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்களும் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் வெளிநாட்டில் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ரொட்டேர்டேம் நிகழ்ச்சி பெரு விமர்சையாக நேற்று நடைபெற்றது. இதில் விடுதலை I மற்றும் II திரைப்படத்தின் காட்சி வெளியிடப்பட்டது. இந்த படத்தின் காட்சிகள் முடிந்தவுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் முதல் வெளிநாட்டு ரசிகர்கள் அனைவரும் 15 நிமிடம் எழுந்து நின்று கைதட்டி கூச்சலிட்டு கர ஓசை எழுப்பினார்கள். இதை பார்த்ததும் நடிகர் சூரிவும், இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் படக்குழுவினர் ஆச்சிரியத்தில் திகைத்தும் ஆனந்த வெள்ளத்தில் மிதந்தது போல இருந்தார்கள் . இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
15 Mins Standing Ovation for #Viduthalai Part 1 & 2 at Rotterdam Film Festival 🔥👌
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 1, 2024