இன்னைக்கு நைட் வரியா, இல்லையா?.. 4 வருஷமா ஒருத்தர… இப்போ இந்த எண்ணம் தான் மனசுல இருக்கு… நடிகை கிரண் பரபரப்பு பேட்டி..!! - cinefeeds
Connect with us

Uncategorized

இன்னைக்கு நைட் வரியா, இல்லையா?.. 4 வருஷமா ஒருத்தர… இப்போ இந்த எண்ணம் தான் மனசுல இருக்கு… நடிகை கிரண் பரபரப்பு பேட்டி..!!

Published

on

தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் முன்னணி நடிகையாகவும் வளம் வந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். இவர் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் அடுத்தடுத்து வின்னர் மற்றும் வில்லன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் சினிமாவில் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை பற்றி அவர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில், நான் தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானதும் இந்திக்கு சென்றேன். அங்கு வரவேற்பு இல்லாததால் மீண்டும் சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டேன். சினிமாவில் எனக்கு நிறைய கசப்பான அனுபவங்கள் இருந்தது. பட வாய்ப்பு அளிப்பதற்காக என்னை பலமுறை படுக்கைக்கு அழைத்தனர். அதனால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் போட்டதும் அவர்களது சுயரூபத்தை காட்டி விடுவார்கள்.

Advertisement

இன்று இரவு வரியா இல்லையா என்று சர்வ சாதாரணமாக கேட்டு விடுவார்கள். உடனே நான் அந்த படத்தில் இருந்து வெளியே வந்து விடுவேன். நடிப்பை விட்டு விலகி ஏதாவது வியாபாரம் செய்யலாமா என்று சிந்தித்தேன். நான்கு வருடங்களாக ஒருவரை காதலித்த நிலையில் அவர் நல்லவர் இல்லை என்று தெரிந்தவுடன் அந்த உறவை முறித்துக் கொண்டேன். தற்போது அனைத்து பிரச்சினைகளும் நீங்கிய நிலையில் பட வாய்ப்புகளும் வருகிறது. நான் தற்போது யாரையும் காதலிக்கவில்லை திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in