அதுக்குள்ள இவ்ளோ பெருசா வளந்துட்டாரா?… கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் ஓணம் கொண்டாடிய நடிகை பூர்ணா… வைரல் பிக்ஸ்… - Cinefeeds
Connect with us

Uncategorized

அதுக்குள்ள இவ்ளோ பெருசா வளந்துட்டாரா?… கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் ஓணம் கொண்டாடிய நடிகை பூர்ணா… வைரல் பிக்ஸ்…

Published

on

தமிழில் இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா.

தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலமானார். மலையாள திரையுலகில் தான் இவர் முதன் முதலில் அறிமுகமானார். இவரின் இயற்பெயர் ஷாம்னா காசிம்.

திரைப்படங்களுக்காக தனது பெயரை பூர்ணா என்று மாற்றிக் கொண்டார். தமிழில் இவர் கொடைக்கானல், ஆடு புலி, வித்தகன், வேலூர் மாவட்டம், ஜன்னல் ஓரம், தகராறு, சகலகலா வல்லவன், கொடிவீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி படத்தில் அவரது தோழியாக வி கே சசிகலா கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

தமிழில் அவ்வப்போது தலை காட்டும் பூர்ணா தெலுங்கில் பல திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். தமிழில் பெரிய இடைவெளிக்குபின் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த இவர்  சானித் ஆசிப் அலி எனும் தொழில் அதிபரை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுது ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை பூர்ணா. இவர் தற்பொழுது தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.