சொகுசு கார் வாங்கிய ‘சூரரை போற்று’ பட நடிகை… விலைய கேட்டா அப்புடியே அசந்து போயிடுவீங்க… - cinefeeds
Connect with us

Uncategorized

சொகுசு கார் வாங்கிய ‘சூரரை போற்று’ பட நடிகை… விலைய கேட்டா அப்புடியே அசந்து போயிடுவீங்க…

Published

on

தமிழ் சினிமாவில் ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் அபர்ணா  பாலமுரளி. இப்படத்தில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க பல படங்களில் நடிக்க தொடங்கினார். மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

இப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களிடம் அதிகம் வரவேற்கப்பட்டது. இத்திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது.இத்திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்று குவித்தது. இதை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் நடிகையாக மட்டுமின்றி பின்னணி பாடகி ஆகவும் விளங்கி வருகிறார்.

Advertisement

‘மகேசிண்ட பிரதிகாரம்’ என்ற படத்தில் ஜிம்ஸி என்ற வேடத்திலும், ‘சண்டே ஹாலிடே’ என்ற படத்தில் அனு என்ற கதாபாத்திரத்திலும் நடித்து மலையாள திரை உலகில் பிரபலமானார். இவர் கேரளாவில் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர். கே பி பாலமுரளி மற்றும் சோபா முரளி ஆகியோருக்கு பிறந்தவர் நடிகை அபர்ணா பாலமுரளி.

இவர் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இந்நிலையில் நடிகை அபர்ணா பாலமுரளி தற்பொழுது சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை 1.5 கோடிக்கும் மேல் என கூறப்படுகிறது.  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார் வாங்கிய மகிழ்ச்சியான செய்தியை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in