Uncategorized
ஏ.ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி… இன்று ஒரு நாள் மட்டுமே டைம்… முக்கிய அறிவிப்பு..!!
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி மறக்குமா நெஞ்சம் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக வெள்ளி, தங்கம் மற்றும் வைரம் என 2000 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டன. டிக்கெட் பெற்றுக் கொண்டு ரசிகர்கள் அனைவரும் இசை கச்சேரி நடைபெறும் இடத்திற்கு சென்ற நிலையில் அங்கு சரியான பார்க்கின் வசதி இல்லாததால் பல மணி நேரம் காத்திருந்தனர்.
அதேசமயம் ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் பலருக்கும் இருக்கைகள் கிடைக்காமல் போனது. பலரும் கூட்டத்திற்குள் சிக்கி வெளியே வர முடியாமல் திணறியதாகவும் ரசிகர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி ஏற்பாட்டாளர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட்டை பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7000 பேர் டிக்கெட்டை ஸ்கேன் செய்து அனுப்பி உள்ளதாகவும் 3000 பேரின் டிக்கெட்டுகளை பரிசீலனை செய்து ஆயிரம் பேருக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.