Uncategorized
“நடிக்கவே கூடாதுன்னு முடிவு”.. ஆனால் அவரின் கதையைக் கேட்டதும் உடனே ஓகே சொன்னா அர்ஜுன்… அந்தப் படம் எது தெரியுமா..??
தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்றுவரை பல திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் அர்ஜூன். இவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. பல திரைப்படங்களில் இயக்கியும் நடித்திருக்கும் இவர் பொதுவாகவே ஆக்சன் திரைப்படங்களில் நடித்த ரசிகர்களை கவர்ந்தவர். அதன் காரணமாகவே நடிகர் அர்ஜுன் ஆக்சன் கிங் என்று ரசிகர்கள் அன்புடன் இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறார்.
தற்போது 60 வயதாகும் அர்ஜூன் இளம் ஹீரோகளுக்கு டப் கொடுக்கும் விதமாக தனது உடலை மெருகேற்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றார். இவருக்கு சினிமாவில் ஆரம்ப காலத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனவே தன்னுடைய சொந்த பணத்தை வைத்து தானே இயக்கி நடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். அதன்படி சேவகன் என்ற திரைப்படத்தை இயக்கி தயாரித்து அர்ஜுன் நடிக்க தொடங்கினார்.
அப்போது அந்த காலகட்டத்தில் வேறு எந்த ஒரு இயக்குனரின் இயக்கத்திலும் நடிக்க வேண்டாம் என்று அர்ஜூன் முடிவு செய்த நிலையில் இயக்குனர் சங்கர் வந்து ஜென்டில்மேன் கதையை கூறியதும் இந்த திரைப்படத்தை மிஸ் பண்ண கூடாது என்று முடிவெடுத்து அர்ஜூன் உடனே நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இந்த திரைப்படம் அர்ஜுனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் ஹரோல்ட் தாஸ் என்ற கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.