Uncategorized
kgf படத்தில் மிரள வைத்த இந்த பிரபல வில்லன் நடிகர் யார் தெரியுதா?… அடடே இவரா?….
கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான்.
இந்த கே ஜி எப் திரைப்படம் தான் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. இதனை தொடர்ந்து வெளியான கே ஜி எஃப் 2 படம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருந்தார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இயக்கம், திரைக்கதை என இரண்டிலுமே பிரசாந்த் நீல் மிரட்டி இருந்தார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் 2 மடங்கு மாசாக வெளிவந்தது
. விறுவிறுப்பான கதைகளும், காட்சிகளுக்கு காட்சி பிரம்மாண்டம், அழுத்தமான வசனம், ஆர்ப்பரிக்கும் சண்டைக்காட்சிகள், பிரம்மிக்க வைக்கும் ஆக்ஷன் என படத்திற்கு தேவையான அனைத்தையுமே கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்தார் இயக்குனர்.
முதல் நாளிலேயே கேஜிஎப் 2 படம் 130 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படி வெளியான கேஜிஎஃப் படத்தில் அவரை ஆரம்பத்தில் பார்க்கும் போதே பயங்கரமாக இருக்கும், அப்படியொரு கேங்ஸ்டர் ரோலில் நடித்தவர் நடிகர் பி.எஸ். அவினாஷ்.
கேஜிஎஃப் படத்தின் முதல் பாகத்தில் மும்பையில் இருந்து ராக்கி பாயை கர்நாடகாவிற்கு கொண்டு வரும் பொறுப்பே இவரிடம் தான் கொடுக்கப்பட்டு இருக்கும்.
கன்னட நடிகரான பி.எஸ். அவினாஷ் பல கன்னட படங்களில் நடித்திருந்தாலும், கேஜிஎஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகம் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை அளித்துள்ளது.
இது போன்ற மிரட்டலான பார்க்கவே பயங்கரமாக இருக்கும் கேங்ஸ்டர்கள் நடுவே தான் ராக்கி பாய் மான்ஸ்டராக ராஜாங்கம் நடத்தும் போது, அந்த கதாபாத்திரத்திற்கு வலிமை கூடுகிறது.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் பி.எஸ். அவினாஷ். இவர் தற்பொழுது தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை’இணையத்தில் பகிர்ந்து திருமண வாழ்த்துக்களை கூறியுள்ளார். தற்பொழுது இப்புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.